
32 ஆண்டுகளுக்குப்பின் பாஜக வரலாறு படைக்க இருக்கிறது. 1990ம் ஆண்டுக்குப்பின் மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை் கொண்ட கட்சியாக மத்தியில் ஆளும் பாஜக மாறி வரலாறு படைக்கப் போகிறது.
தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு 97 எம்.பிக்கள் உள்ளனர், இன்னும் 3 உறுப்பினர்கள் வெற்றி அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு வெளியிட்டால் பாஜகவின் பலம் 100 எம்.பி.க்களாக மாறும்.
3 இடங்கள்
அசாம்,நாகாலாந்து, திரிபுராவில் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு3 இடங்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் 13 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக பஞ்சாப்பில் மட்டும் தோல்வி அடைந்தது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும், இமாச்சலப்பிரதேசத்தில் 5 இடங்களிலும் வென்றது.
100 ஆக மாறும்
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியது.245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜகவின் பலம் 97 ஆக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதை குறிப்பிட்டால் 100ஆக மாறும். கடந்த 2014ம்ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 55 ஆக இருந்தது.
32 ஆண்டுகளுக்குப்பின்
அதன்பின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிக்கத் தொடங்கியது. கடைசியாக 1990ம் ஆண்டு மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100க்கு மேல் இருந்தது. அப்போது காங்கிரஸின் பலம் 108 ஆக இருந்தது. அதன்பின 32 ஆண்டுகளுக்குப்பின் பாஜகவின் பலம் மாநிலங்களவையில்100 இடங்களை எட்டி வரலாறு படைக்கிறது.
1990களில் 100 இடங்களில் இருந்த பாஜக அதன்பின் 99ஆகவும், அதன்பின் பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தலில் அடைந்த தோல்வியால் மாநிலங்களவை உறுப்பினர்களை இழந்து வந்தது. ஆனால், 2014ம்ஆ ண்டுக்குப்பின் பாஜக விஸ்வரூமெடுத்து பல்வேறு மாநிலங்களில் அடைந்த வெற்றியால், 8 ஆண்டுகளில் 45 எம்.பி.க்களைப் பெற்றுள்ளது.
விரைவில் தேர்தல்
இதற்கிடையே 52 இடங்களுக்கான தேர்தலும் விரைவில் நடக்க இருக்கிறது. அப்போது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆகிய கட்சிகள்தான் அதிகமாக எம்.பி. இடங்களைப் பெறும். அந்த நேரத்தில் பாஜக பின்னடைவைச் சந்திக்கும். உ.பி.யில் மாநிலங்களவைக்கு காலியாகும் 11 இடங்களில் பாஜக 8 இடங்களை வெல்வதற்கு வாய்ப்புள்ளது.