Lottery Martin: தமிழ்நாட்டில் அதிக தேர்தல் நன்கொடை கொடுத்த வள்ளல் இவர்தான்; டாப் 10 நிறுவனங்கள் பட்டியல் இதோ!!

By Ramya s  |  First Published Mar 15, 2024, 9:13 AM IST

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1368 கோடி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் நன்கொடை வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 15-ம் தேதி ரத்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை, தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

அதன்படி இந்த விவரங்களை சமர்ப்பிக்க ஜூன்  30 வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை கடந்த 11-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன் 12-ம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

SBI Electoral Bond Data: எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை; தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு!!

அதன்படி கடந்த 12-ம் தேதி மாலை எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சீரியல் நம்பர் எங்கே? தேர்தல் பத்திர வழக்கை நாளை மீண்டும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

இந்த பட்டியலில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1368 கோடி நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையை சேர்ந்த லாட்டரி நிறுவனரான மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய டாப் 10 நிறுவனங்கள்:

  • ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சேவைகள் PR – ரூ. 1,368 கோடி
  • மேகா இன்ஜினியரின் & இன்ஃப்ராஸ்டரக்ச்சர் நிறுவனம் – ரூ. 966 கோடி
  • Qwik சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் - ரூ 410 கோடி
  • வேதாந்தா லிமிடெட் – ரூ. 400 கோடி
  • ஹால்டியா எனர்ஜி லிமிடெட் – ரூ. 377 கோடி
  • பார்தி குழுமம் – ரூ. 247 கோடி
  • எஸ்ஸெல் மைனிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் - ரூ 224 கோடி
  • வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் - ரூ 220 கோடி
  • கெவென்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிமிடெட் - ரூ 195 கோடி
  • மதன்லால் லிமிடெட் – ரூ. 185 கோடி

சென்னை கிரீன்வுட்ஸ் பிரைவேட் லிமிடெட்  என்ற நிறுவனம். ஜனவரி 2022—ம் ஆண்டில், தேர்தல் பத்திரங்களில் ரூ.105 கோடி நன்கொடையாக அளித்தது. இந்த நிறுவனத்தில் ஜூலை 2021 இல் வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்தனர்.தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அளித்த விவரத்தில், அதானி, அம்பானியின் நிறுவனங்கள் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தேர்தல் பத்திரம் பின்னணி :

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1000, ரூ.10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கலாம்.தேர்தல் பத்திரத்தில் யார் பணம் என்ற தகவல் இடம்பெற தேவையில்லை.  இந்த தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லை எனில், அந்த பணம் பிரதமரின் தேசிய நிவாரண கணக்கில் வரவு வைக்கப்படும். 

click me!