பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு பெண்ணும் அவரது 17 வயது மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சதாசிவநகர் போலீஸார் வியாழக்கிழமை (மார்ச் 14) இரவு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான 81 வயதான பி.எஸ்.எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (போக்சோ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது மகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போக்சோ (POCSO) சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
போலிஸ் ஆதாரங்களின்படி, 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியை நாட தாயும் மகளும் சென்றிருந்தபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை கர்நாடக அரசியலில் உண்டாக்கி உள்ளது.
ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்ட கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவு வசதிகள் இருக்கு..