நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தலா 2 ரூபாய் குறைத்துள்ளது.
மத்திய அரசு 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
"பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இரு சக்கர வாகனங்கள் மற்றும் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்களை இயக்குவதற்கான செலவுகளைக் குறைக்கும்" என பெட்ரோலியத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்த ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்ததன் மூலம், கோடிக்கணக்கான இந்தியர்களைக் கொண்ட தனது குடும்பத்தின் நலனும் வசதியும் தான் எப்போதும் தனது இலக்கு என்பதை மோடி ஜி மீண்டும் நிரூபித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
SBI Electoral Bond Data: எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை; தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு!!
पेट्रोल और डीज़ल के दाम ₹2 रुपये कम करके देश के यशस्वी प्रधानमंत्री श्री जी ने एक बार फिर साबित कर दिया कि करोड़ों भारतीयों के अपने परिवार का हित और सुविधा सदैव उनका लक्ष्य है।
वसुधा का नेता कौन हुआ?
भूखण्ड-विजेता कौन हुआ?
अतुलित यश क्रेता कौन हुआ?
नव-धर्म… https://t.co/WFqoTFnntd pic.twitter.com/vOh9QcY26C
எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்துவருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதெல்லாம், அதை எண்ணெய் நிறுவனங்கள் தான் செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலையை தலா 2 ரூபாய் குறைப்பதாக மத்திய அரசே அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதன் மூலம் 663 நாட்களுக்குப் பிறகு மாற்றமின்றி இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய உள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
தேர்தல் நெருங்குவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசு இப்போது பெட்ரோல், டீசல் விலையும் குறைத்துள்ளது.
சீரியல் நம்பர் எங்கே? தேர்தல் பத்திர வழக்கை நாளை மீண்டும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!