சீரியல் நம்பர் எங்கே? தேர்தல் பத்திர வழக்கை நாளை மீண்டும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

By SG Balan  |  First Published Mar 14, 2024, 9:33 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான  ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு நாளை தேர்தல் பத்திர வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது.


தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக தேர்தல் பத்திர உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

ரூபாய் நோட்டுகளில் உள்ள போல தேர்தல் பத்திரங்களுக்கும் சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் பட்டியலில் தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர்கள் இல்லை. இதனால் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

தேர்தல் பத்திரத் திட்டத்தை பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாரத ஸ்டேட் வங்கி செவ்வாய்க்கிழமை அந்த விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அளித்தது.

SBI Electoral Bond Data: எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை; தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு!!

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு:

இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளில் சில மாற்றங்களைக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால், நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ கொடுத்த தரவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 15) வரை அவகாசம் கொடுத்திருந்த நிலையில் ஒரு நாள் முன்பாகவே தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,368 கோடி பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ.980 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளது.

லக்கா மாட்டிக்கிச்சு! பர்த் டே நம்பரில் லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு!

click me!