Electoral Bonds in Tamil: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Electoral Bonds in Tamil: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் பத்திரத் திட்டத்தை பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாரத ஸ்டேட் வங்கி செவ்வாய்க்கிழமை அந்த விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அளித்தது.
எஸ்பிஐ கொடுத்த தரவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 15) வரை அவகாசம் கொடுத்திருந்த நிலையில் ஒரு நாள் முன்பாகவே தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Jaya Thakur: அரசியல் கட்சிகளை மிரள வைத்த ஜெயா தாகூர்; யார் இவர்? என்ன செய்தார் தெரியுமா?
தேர்தல் கமிஷன் எஸ்பிஐ கொடுத்த தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. https://t.co/dKYWciX285 pic.twitter.com/MtzJcUQSTz
பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,368 கோடி பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ.980 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், அவை வாங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ஆகியவை தேதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொறு பட்டியலில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் அவை பணமாக்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ஆகியவை பணமாக்கப்பட்ட தேதியுடன் தரப்பட்டுள்ளன. இந்த இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டு, எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பதைக் கண்டறிய வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக, அதிமுகவுக்கு கிடைத்து இருக்கும் தேர்தல் நன்கொடை. pic.twitter.com/nfdcmmrCiF
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
உச்ச நீதின்றத்தில் மீண்டும் விசாரணை:
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக தேர்தல் பத்திர உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
ரூபாய் நோட்டுகளில் உள்ள போல தேர்தல் பத்திரங்களுக்கும் சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் பட்டியலில் தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர்கள் இல்லை. இதனால் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் மறு:
இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளில் சில மாற்றங்களைக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால், நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான இரண்டு கோப்புகளையும் டவுன்லோட் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யலாம்.
https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds
தமிழ்நாட்டுக்கு நிதி கேட்டால் பிரிவினைவாதி என்பதா?: நறுக்கென்று கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்!