Electoral Bonds : உச்ச நீதிமன்றப் பதிவகம், சீலிடப்பட்ட கவரில் பென் டிரைவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட (தேர்தல் பத்திரங்கள் தரவு) பதிவோடு, நகல்களையும் அளித்துள்ளது" என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவலை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில், சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில், முன்பு சமர்ப்பிக்கப்பட்ட புதிய தகவலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் ஏப்ரல் 12, 2019க்கு முன்பு நடந்த பரிவர்த்தனைகள் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்தத் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்டன என்பது நாம் அறிந்ததே. ஏப்ரல் 12, 2019 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் சீல் வைக்கப்பட்ட கவரில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?
"அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் சீல் செய்யப்பட்ட அட்டைகளைத் திறக்காமலேயே, உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டன. மார்ச் 15, 2024 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, உச்ச நீதிமன்றப் பதிவகம், அதன் டிஜிட்டல் பதிவோடு (Pendriveவில்), டிஜிட்டல் அல்லா நகல்களை திருப்பி அனுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு இணங்க, பத்திரங்களின் தனிப்பட்ட எண்களைக் கேட்டு எஸ்பிஐக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக vs காங்கிரஸ்: தேர்தல் வரலாற்றில் வளர்ச்சியும், வீழ்ச்சியும்..!