4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் ஆட்சியை தக்கவைப்பார்கள்.? யார் ஆட்சியை பிடிப்பார்கள் என நாடே ஆவலோடு எதிர்பாரத்து காத்துள்ளது.
5 மாநில தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் 4 முதல் 5 மாத காலமே உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறவுள்ள நிலையில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு அதிகமாக வாழும் கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்திற்கு செல்வதால் இன்று நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
undefined
4 மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை
இதனிடையே மற்ற 4 மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 119 தொகுதி கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் , பிஆர்எஸ் மற்றும் பாஜக மோதுகிறது. இதில் 60 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள். ராஜஸ்தானில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடி போட்டி நடைபெறுகிறது. இதில் 101 இடங்களை பிடிக்கும்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும், மத்திய பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டி போடுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளில்பொரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவைப்படுகிறது.
மோடியா.? ராகுலா.?
சத்தீஸ்கரின் மொத்தமுள்ள 90 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ்- பாஜக மோதுகிறது. இதில் 46 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் அந்த மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பார்கள். எனவே இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனை தொடர்ந்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 8முதல் 9 மணிக்குள் யார் முன்னனி என்ற நிலவரம் தெரியவரும். முற்பகல் 11 மணிக்கு 4 மாநிலத்தில் ஆட்சியை தக்கவைப்பவர்கள் தெரிந்து விடும். எனவே இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்