
ஊழல் செய்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பாரதியஜனதா கட்சியின் தலைவர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பொதுநலன் மனு மீதான விசாரணையில், தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாமா? என்பது என்பது குறித்து பொதுநலன் மனுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அஸ்வினி உபாத்யாயா, முன்னாள் தேர்தல் ஆணையர் லிங்டோ, மற்றும் தொண்டு நிறுவனம் ஆகியவை தாக்கல் செய்து இருந்தன.
இந்த மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தது. அதில், “ ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.
இப்போதுள்ள நிலையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் மட்டுமே தடை இருக்கிறது. இதை வாழ்நாளுக்கு உயர்த்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேகமாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்து இருந்தது.