From the India Gate: காங்கிரஸ் கனவுகளும் காணாமல் போன மொபைல் போனும்

By SG Balan  |  First Published Feb 26, 2023, 6:15 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 15வது எபிசோட்.


கனவு காண்பவர்கள்

2024ல் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை எதிர்கொள்வதற்கு எதிர்கட்சிகளை இணைத்து வலிமையான கூட்டணியை அமைப்பது தங்களால் மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் கட்சி ராய்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளது.

Latest Videos

ஆனால், அரசியரல் சூழலைக் கவனித்து வருபவர்களுக்கு இப்படிப்பட்ட கூற்றுகளைக் கேட்கும்போது சிரிப்புதான் வரும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களே காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகளை அம்பலப்படுத்துகின்றன. இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ஏற்பட்ட ஒற்றுமை மிகக் குறைவானதாகவே தெரிகிறது.

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கும், டி. கே. சிவகுமாருக்கும் இடையே போட்டி என்றால், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கெலாட் தான் மட்டும்தான் முதல்வர் ஆவதற்கு தகுதியான ஒரே தலைவர் என்று கருதுகிறார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து வரும் செய்திகளும் உட்கட்சி பூசல்கள் தீவிரம் அடைந்துள்ளன என்பதையே காட்டுகின்றன. ம.பி.யில் கமல்நாத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு பிரிவினர், மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே அதனை வெளிப்படுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரில் தற்போதைய பூபேஷ் பாகலை அமைதிப்படுத்த டி. எஸ். சிங் தியோ என்னென்ன செய்து ஆட்டம் காட்டப் போகிறாரோ என்று மூத்த தலைவர்கள் கவலையில் உள்ளனர். இப்படி கட்சிக்குள் திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், இவை எல்லாம் கோழி முட்டையிடுவதற்கு முன்பே அவற்றை எண்ணிப் பார்க்கும் கதையாகத்தான் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். இந்தப் பழமையான பெரிய கட்சி நான்கில் எத்தனை மாநிலங்களை தன்வசப்படுத்தும் என்பது கருத்துக்கணிப்பாளர்களுக்கே இன்னும் உறுதியாக தெரியவில்லை.

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த தமிழர் உள்பட இருவர் கைது

‘அவர்களை மன்னியுங்கள்!’

‘ஏழு நாட்களுக்குள் இடத்தைப் காலி செய்யுங்கள் அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவிப்பது சாதாரணமானதுதான். ஆனால் இந்த சாதாரண சட்ட அறிவிப்பை பகவான் 'பஜரங்கி' (அதாவது ஹனுமான்) பெயரில் பெயரில் வெளியிட்டதுதான் அசாதாரண விவகாரமாக ஆகிவிட்டது.

ஆம், சீதா தேவியைத் தேடிச் சென்றபோது இலங்கையில் தைரியமாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய அதே மாருதி தான். ரயில்வேயின் கூற்றுப்படி, மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் ரயில்வே நிலத்தை அனுமார் ஆக்கிரமித்து இருக்கிறாராம்.

ரயில்வே நிலத்தில் இருந்து காலி செய்யாவிட்டால் அவரது வசிப்பிடம் இடிக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவரது சன்னதியை இடிக்கும் செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்றும் நோட்டீசில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அனுமாருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் பற்றிய செய்தி சமூக ஊடகங்கள் மூலம் டபுள் எஞ்சின் வேகத்தில் பரவியது. அதன் விளைவாக அந்த அறிவிப்பு உடனே வாபஸ் பெறப்பட்டு, தலைமை அர்ச்சகர் பெயரில் புதிய நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

ஒருவேளை, அனுமார் தனக்கு ஏற்பட்ட அவல நிலையை வெளிப்படுத்த பைபிளில் உள்ள பின்வரும் வாசகத்தை பயன்படுத்தக் கூடும்: “அவர்களை மன்னியுங்கள்! ஏனென்றால், அவர்கள் செய்வது என்ன என்று அவர்களுக்கே தெரியாமல்தான் இப்படிச் செய்கிறார்.”

 

PM Modi in Mann Ki Baat: மஞ்சப்பை இருக்கு! பிளாஸ்டிக் எதுக்கு? பிரதமர் மோடி மன் கீ பாத் உரையில் வேண்டுகோள்

ராங் நம்பர்

ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனுக்காக யார் தான் ரூ.1 லட்சத்தை செலவு செய்வார்? ஆனால் ஓர் அரசியல் தலைவர் கண்காட்சி ஒன்றில் பங்கேற்றபோது தன்னிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட போனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

"அதில் எதுவும் இல்லை" என்பதுதான் ‘அப்பட்டமான’ உண்மை என்று அவர் திரும்பத் திரும்பக் கூறும்போது, அதைவிட இன்னும் பலவும் கண்ணில் படுகின்றன.

மற்றொரு அரசியல் தலைவர் தனது ரூ.1 லட்சத்துக்கும் மேல் மதிப்புடைய ஐபோன் தொலைந்து போனதற்குக்கூட இவரைப் போல் கவலைப்படவில்லை.

மங்களூருவில் நடந்த ஒரு கண்காட்சியில் இந்த இரு தலைவர்களைப் போல பலர் தங்கள் மதிப்புமிக்க பொருட்களை இழந்தனர். பலர் பணத்தை இழந்தனர். இருப்பினும் அமைதியாக இருக்க முடிவு செய்துவிட்டனர்.

பிக்பாக்கெட் மாஸ்டராகத் தோன்றிய மர்ம நபர் மிகவும் தொழில்முறை திருடனாக இருந்ததால் யாரையும் விட்டுவைக்கவில்லை என போலீசார் கூறுகிறார்கள். கண்காட்சிக்கு வந்திருந்த சுமார் 15 தலைவர்கள் தங்களுடைய விலைமதிப்பு மிக்க பொருட்கள் மாயமாகியுள்ளன.

இதுபற்றி யாரும் புகார் அளிக்க விரும்பவில்லை என்பதுதான் முரண்பாடாக இருக்கிறது. ஒரு வேளை பொதுச்சொத்தை தவறாக பயன்படுத்தியதற்குக் கிடைத்த பலன் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம். விட்டதைப் பிடிக்க விடாப்பிடியான முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு சாதாரண மொபைல் போன் தொலைந்து போனதற்காக ஏன் இந்த அளவுக்கு கவலை? என்ற சந்தேகம் வருகிறது.

Priyanka Gandhi: பிரியங்காவுக்கு 6000 டன் ரோஜா இதழ்களால் ரோஸ் கார்பெட் வரவேற்பு!

போட்டோவுக்கு போட்டி

போட்டோவுக்கு போஸ் கொடுக்க முந்திக்கொண்டு வருவது இப்போது வழக்கமாக ஆகிவிட்டது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

உத்தர பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊடக கவனம் பெறுவதற்காக இப்படிப் பலமுறை களத்தில் இறங்கி வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறார். முதல்வர் போன்ற மூத்த தலைவர்களுடன் போட்டோ எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் சரியாக ப்ரேமுக்குள் நுழைந்துவிடுகிறார்.

இதற்காக அவர் பலமுறை எச்சரிக்கப்பட்டாலும், அவரது நடத்தையில் எந்த மாற்றம் காணவில்லை.

சமீபத்தில், அவர் முதல்வருக்கு அருகில் செல்வதற்காக ஒரு அமைச்சரை ஒதுக்கித் தள்ளினார். முதல்வரின் பாதுகாப்புப் படையில் இருந்த ஒரு அதிகாரி கூட அவரைத் தடுக்க முயன்றார். இவரைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டதால், மாநிலத் தலைவர்கள் மத்தியத் தலைமையை நாடினர். இப்போது அந்த முன்னாள் அமைச்சர் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென் கொரிய தூதரக அதிகாரிகள்... வீடியோ பார்த்து மெர்சலான மோடி

பாவனை அரசியல்

பெண்களை மதிக்கும் விஷயத்தில் அந்தக் கட்சியின் வரலாறு பரிதாபமானது. ஆனால் அந்தக் கட்சியின் தலைவர்கள் திடீரென்று பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாக முன்வரும்போது இயல்பாகவே ஆச்சரியம் ஏற்படுகிறது.

உத்தரப் பிரதேச அரசு ‘கா பா என் உ.பி.’ (உ.பி.யில் என்ன இருக்கிறது?) என்ற பாடலைப் பாடிய பெண் குரலுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, பிரதான எதிர்க்கட்சி அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது.

அதன் தேசிய தலைவர் அந்தக் கலைஞருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை கூட வெளியிட்டார். அந்தக் கலைஞர் விரைவில் கட்சியில் சேர்ந்துவிடுவார் என்றும் ஊகங்கள் எழுந்தன.

இதற்கிடையில் அந்தக் கட்சி அரசின் நோட்டீசை விமர்சித்ததோடு நில்லாமல், அதற்கு மேலும் சென்றிருக்கிறது. அந்தப் பாடகருக்கு சட்டப்பூர்வ ஆதரவை உறுதி செய்யுமாறு கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த மாதிரி பாவனை முயற்சிகள் மூலம் தங்கள் மீது உள்ள பெண்களுக்கு எதிரான அரசியல் பிம்பத்தை மாற்ற முடியும் என்று அந்தக் கட்சி நம்பிக்கை வைத்திருக்கிறது.

Radha Vembu: யார் இந்த ராதா வேம்பு? ரூ.21,000 கோடி சொத்துடன் இந்தியாவின் பணக்காரப் பெண்!

பூவோடு போராட்டம்

ஹவாய் கலாச்சாரத்தில், உங்கள் இடது காதில் பூ வைத்து இருந்தால் அவர் திருமணமானவர் அல்லது ஒருவருடன் உறவில் இருப்பவர் என்று அர்த்தம். வலது காதில் பூ வைத்திருந்தால் திருமணம் ஆகாதவர் அல்லது திருமணத்துக்குத் தயாராக இருப்பவர் என்று பொருள்.

ஆனால் ஹவாயில் இருந்து சுமார் 13,000 கிமீ தொலைவில், மூத்த அரசியல்வாதி ஒருவர் தனது வலது காதில் பூ வைத்திருத்ததைப் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வலது காதில் பூ வைத்துக்கொண்டு தனிநபர் போராட்டம் நடத்தினார். 'கிவி மேல ஹூவா' (காதில் பூ சுற்றுவது) என்பது கன்னட பழமொழி. அதற்கு 'மற்றவர்களை ஏமாற்றுதல்' என்று பொருள்.

இந்த விநோதமான நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததோ இல்லையோ, பெங்களூரு தெருக்களில் காங்கிரஸ்காரர்கள் பாஜகவின் பட்ஜெட் உரையுடன் சாமந்திப்பூவை விநியோகிக்கத் தொடங்கியதால், அந்தப் பூவுக்கு கிராக்கி ஏற்பட்டு அதன் விலை உயர்வுக்கு உதவி இருக்கிறது.

இந்த யோசனையின் பின்னணியில் இருப்பது யார்? அல்லது இப்படிச் செய்யும்படி சித்தராமையாவுக்குச் சொன்னது யார் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.

சித்தராமையா ஆட்சேபனை தெரிவித்தபோதும், காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இந்த சர்க்கஸ் வேலை அவர் செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.

காங்கிரஸுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் சுனில் கனுகோலு தான் இந்த 'கிவி மேல ஹூவா' சம்பவத்துக்கும் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது.

 

Fact Check: சுகாதரத் துறையில் 5% வரியா? மத்திய பட்ஜெட் பற்றிய குற்றச்சாட்டு உண்மையா?

click me!