தேர்தலுக்கு முன் பட்ஜெட்டா? - மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

First Published Jan 7, 2017, 11:51 AM IST
Highlights


உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. 

இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் மத்தியஅரசின் பொது நிதிநிலை அறிக்கை தேதியும் மிக அருகாமையில் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற கோரி எதிக்கட்சிகள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சி , திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பொது நிதிநிலை அறிக்கை தேதிகளும் மிக அருகாமையில் இருப்பதால் அது ஆளும் கட்சிக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கும் என கோரி நிதிநிலை அறிக்கைக்கான தேதியை மாற்ற கோரி எதிக்கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஐந்து மாநில தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

click me!