டெல்லியில் தனது சகோதரியின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டதாக 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சமத்துவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் என்ற இடத்தின் அருகே உள்ள புலந்த் மஸ்ஜித் பகுதியில் தான் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இரு சகோதரிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 20 வயதான சுமைலா, நேற்று புதன்கிழமை மாலை 6:30 மணியளவில், தனது மூத்த சகோதரி ஒரு நாட்டுத் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் கூறியதாக துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) ஜாய் டிர்கி தெரிவித்தார்.
30 வயது பெண்ணான சோனு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் அவர் மீது மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது சாஸ்திரி பார்க் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65வயது முதியவர் கைது
இந்த வழக்கை விசாரித்த போலீசார் அளித்த தகவலின்படி, மூத்த சகோதரி சோனு என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், தனது இளைய சகோதரியை துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். மேலும் அந்த துப்பாக்கியின் பின்புறத்தால் அவருடைய தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இளைய சகோதரியான சுமைலா, தனது கணவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சோனு சந்தேகித்ததாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் அக்கா, தங்கையை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மூத்த சகோதரியிடம் எப்படி அந்த நாட்டு துப்பாக்கி கிடைத்தது என்ற விசாரணையும் தற்போது நடந்து வருகின்றது.