மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவில் இருந்து வெளியேறி தனி அணி அமைத்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை 7.30 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்பார் என்று பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவில் இருந்து வெளியேறி தனி அணி அமைத்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை 7.30 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்பார் என்று பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா... நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க திட்டமா?
இதனை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!
The new government in Maharashtra will get the backing of PM Modi, Amit Shah and J P Nadda: Eknath Shinde
— Press Trust of India (@PTI_News)இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் எனவும், தான் அரசில் இருந்து விலகி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன் எனவும் அறிவித்தார். மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்பார் எனவும் அவர் தெரிவித்தார். இதுக்குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைய பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பேசிய தேவேந்திர பட்னவிஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல பிரச்னைகளை ஷிண்டே தலைமையிலான அரசு திறம்பட தீர்க்கும். மராத்தியர்கள், ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்வது ஆகியவை புதிய அரசின் முன்னுரிமைகளாக இருக்கும் என்று தெரிவித்தார். மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்ற அறிவிப்பு மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.