பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

By Dhanalakshmi G  |  First Published Jun 30, 2022, 1:39 PM IST

பிஎஸ்எல்வி C 53: சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் இன்று  விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது. 


சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் இன்று  விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது. 

சதீஷ் தவானின் இரண்டாவது ஏவுதள மையத்தில் இருந்து இந்த செயற்கை கோள்கள் இன்று (ஜூன் 30ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் நேற்று இஸ்ரோ ஈடுபட்டு இருந்தது. 

Tap to resize

Latest Videos

பொதுவாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ செய்து வருகிறது. இந்த வகையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர், ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாது ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்படுகிறது. 

இந்த மூன்று செயற்கைக் கோள்களில் டிஎஸ்-இஒ, நியூசர் ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களும் 155 கிலோ எடை கொண்டவை. ஸ்கூப் -1 செயற்கைக் கோள் 2.8 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் நிலத்தின் வண்ண புகைப்படங்கள், பருவநிலை தொடர்பான புகைப்படங்களை தெளிவாக எடுத்து அனுப்பும்.

இந்த மூன்று செயற்கை கோள்களில் ஸ்கூப் 1 மிகவும் சிறியது. சிங்கப்பூரின் என்டியு எலக்டிரிகல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மாணவர்கள் இந்த சிறிய செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 

click me!