Eknath Shinde:மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சிவ சேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்பார் என்று தேவேந்திர பட்னவிஸ் அறிவித்தார்.
சிவ சேனாவில் இருந்து வெளியேறி தனி அணி அமைத்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை 7.30 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்கிறார். பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் இந்த செய்தியை வெளியிட்டார்.
இதையடுத்து பேட்டி அளித்து இருந்த ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவா, பாலசாகேப் தாக்கரேவின் கொள்கைகளை காப்பாற்றவே நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்றார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கு வகிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனை... முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே!!
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்களும், சிவ சேனா அதிருப்தி கோஷ்டிக்கு 39 எம்.எல்.ஏக்களும், சிறிய கட்சிகளுக்கு 10 எம்.எல்.ஏக்களும், 13 சுயேட்சைகளும் உள்ளனர். மொத்தம் 288 பேர் கொண்ட அவையில் 145 பேரின் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும். சிவசேனா எம்.எல்.ஏ., ஒருவர் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து எண்ணிக்கை 287 ஆக குறைந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!
சிவ சேனாவில் 16 (39 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி கோஷ்டி) எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 53 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 44 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் இருவரும் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் உள்ளனர்.
தற்போதைய கணக்கின்படி பார்த்தால், பாஜகவுடன் சேர்த்து ஏக்நாத் ஷிண்டேவுக்கு 168 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது.