
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பொருளாதார சீர்திருத்தத்திற்கான முதல் படியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படும் வேளையில், இந்த முக்கிய முடிவிற்கு பின்னால் இருப்பவர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.
புனே நகரைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான திரு. அனில் போகில், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்திருக்கிறார், இச்சந்திப்பின் போது இந்திய பொருளாதார சீர்திருத்தம் பற்றிய அவரின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்க அனிலுக்கு 9 நிமிடங்களே தரப்பட்டுள்ளன.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக அனிலின் செயல் திட்டத்தை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி ஈா்க்கப்பட்டு, பின்னர் இது தொடர்பாக சுமாா் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மாலை, பிரதமர் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னால் இருந்தது அனில் முன்மொழிந்த செயல்திட்டமே என்று கூறப்படுகிறது.
பிரதமரிடம் அனில் முன்மொழிந்த செயல்திட்டத்தில் இருந்த முக்கிய சாராம்சங்கள்:
* ஏற்றுமதி - இறக்குமதி வரிகளை தவிர்த்து, தற்போதுள்ள 56 வகையான வரிகளை திரும்பப்
பெற வேண்டும்.
* இந்தியாவில் பெரு மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுதல்.
* அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாக காசோலை, வரைவோலை மற்றும்
ஆன்லைன் மூலமே நடைபெறவேண்டும்.
* வருவாய் வசூலுக்கு ஒற்றை வங்கி முறை
இந்த பரிந்துரைகளை அனில், முன்மொழிந்ததற்கு பின்னால் இருந்த முக்கிய காரணங்கள்:
* இந்தியாவின் ஒருநாள் பண பரிவர்த்தனை ரூ. 2.7 லட்சம் கோடி என்றால், ஓர் ஆண்டுக்கு
கணக்கிட்டால் இதுவே ரூ. 800 லட்சம் கோடி ஆகிறது. இதில் வெறும் 20% அளவிலான
பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் மூலம் நடைபெறுகின்றன, மீதி அனைத்தும் ரொக்கமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் ஆகும்.
( இப்படி ரொக்கமாக பரிவர்த்தனை நடைபெறுவதால் அவை கருப்புப் பணமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.)
* நாட்டின் 79% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20 அளவிற்கே செலவு செய்கின்றனர்,
இதனாலேயே பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தேவையில்லாததாக கருதப்படுகிறது.
* இன்று முதல் புதிய ரூ. 500, ரூ. 2000 நோட்டுகள் நம் கரங்களில் தவழப்போகும் வேளையில், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை சாதகமா அல்லது பாதகமா என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.