“வீட்டு சேமிப்பு பணத்தை தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்... எந்த பயமுமில்லை" - அருண் ஜெட்லி முக்கிய தகவல்

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 02:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
“வீட்டு சேமிப்பு பணத்தை தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்... எந்த பயமுமில்லை" - அருண் ஜெட்லி முக்கிய தகவல்

சுருக்கம்

பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவே கதி கலங்கி போயிருக்கிறது.

கடந்த 2 நாட்களாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக கையில் காசிருந்தும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

நேற்று வங்கி விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 500 மற்றும் 1௦௦௦ ரூபாய்கள் மாற்றும் பணிகளும் அதற்கு மாற்று நோட்டுக்களை கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

வீடுகளில் மக்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்றும், அவற்றை தாராளமாக வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

நாட்டின் நலன் கருதியே இந்த முடிவெடுக்கப்டப்டதாகவும், ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும், அருண்ஜெட்லி தெரிவித்தார்.

வங்கியில் சிறிய அளவில் பணத்தை மாற்றுவோருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், கணக்கில் காட்டப்படாத பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகள் மட்டுமே கண்காணிக்கப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.

500 மற்றும் 1000 நோட்டு விவகாரத்தில் தேவையற்ற பீதிகளை உருவாக்க வேண்டாம் என்றும், வரி விதிப்பு முறையை மத்திய அரசு எளிமையாக்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

WFH Start: இனி ஆபீஸ் போக வேண்டாம்! மீண்டும் வருகிறது வொர்க் ஃபிரம் ஹோம்! அடுத்தடுத்து உத்தரவிடும் நாடுகள்.!
நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!