ரூபாய் நோட்டுக்களை மாற்றப்போறீங்களா… ஏதாவது சந்தேகம்னா.. இந்த நம்பருக்கு டயல் பண்ணி கேளுங்க….

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 01:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
ரூபாய் நோட்டுக்களை மாற்றப்போறீங்களா… ஏதாவது சந்தேகம்னா.. இந்த நம்பருக்கு டயல் பண்ணி கேளுங்க….

சுருக்கம்

மத்திய அரசு செல்லாததாக அறிவித்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான பணிகள் வங்கிகள், தபால்நிலையங்களில் இன்று காலை முதல் தொடங்கியுள்ளன.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை அளித்து புதிய  ரூபாய் நோட்டுக்களை பெற்றுச்செல்கின்றனர்.

அதில், தபால்நிலையங்கள், வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டையுடன் விண்ணப்பம் ஒன்றையும், வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்தால் மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பு தொடர்பாக, எழும் அனைத்து  சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பழையரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில், ஏதாவது சிக்கல்கள், வங்கிகளின் சேவைக் குறைபாடு, தாமதம், பணத்தைமாற்றுவதில் எழும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

WFH Start: இனி ஆபீஸ் போக வேண்டாம்! மீண்டும் வருகிறது வொர்க் ஃபிரம் ஹோம்! அடுத்தடுத்து உத்தரவிடும் நாடுகள்.!
நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!