election commission: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருகிறது ஆப்பு: தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை

By Pothy RajFirst Published Sep 20, 2022, 1:54 PM IST
Highlights

அரசியல் கட்சிகள் பெறும் அடையாளம் தெரியாதவர்கள் தரும் நன்கொடையின் அளவை ரூ.20ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாகவும், மொத்த ரொக்க நன்கொடையின் அளவை 20 சதவீதம் அல்லது ரூ.20 கோடியாகக் குறைக்கவும் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் பெறும் அடையாளம் தெரியாதவர்கள் தரும் நன்கொடையின் அளவை ரூ.20ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாகவும், மொத்த ரொக்க நன்கொடையின் அளவை 20 சதவீதம் அல்லது ரூ.20 கோடியாகக் குறைக்கவும் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

தேர்தல் நேரத்தில் கறுப்புப் பணப்புழக்கத்தைக் குறைக்கும் வகையில் இந்த திருத்தத்தை கொண்டுவருவதாக சட்டஅமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின்படி,சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருதல், சீர்திருத்தம் செய்தல், வேட்பாளர் செய்யும் செலவு ஆகியவற்றை சீர்திருத்தும் நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதுள்ள விதிமுறையின்படி, அரசியல் கட்சிகள் ரூ.20ஆயிரத்துக்கு மேல் உள்ள அனைத்து நன்கொடைகளையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம். ஆனால் இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வாங்கியிருந்தால்கூட அதைதேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பது கட்டாயமாகும். இதன் மூலம் நன்கொடை யார் வழங்கியது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை ஏற்படும்.

ராமருக்கு மட்டுமல்ல!அயோத்தியில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கும் கோயில்:வீடியோ இணைப்பு

சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த அங்கீகாரம் பெறாத 284 அரசியல் கட்சிகளை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதில் 253 கட்சிகள் செயல்பாட்டிலேயே இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்துக்குப்பின்புதான் அரசியல் கட்சிகளின் நன்கொடையை நெறிப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அங்கீகாரம் பெறாத அரசியல்கட்சிகள் வரிஏய்ப்பு செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தக் கட்சி அலுவலகங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியதும்குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் கண்டுபிடித்த வகையில், சில அரசியல் கட்சிகள் நன்கொடை ஏதும்வாங்கவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது.ஆனால், தணிக்கையாளர் அறிக்கையில், அதிகமான பணம் பெற்றதற்கும், பெரிய அளவில் பணம் கைமாறியதற்கும் ஆவணங்கள் இருந்துள்ளன. அதாவது ரூ.20ஆயிரத்துக்கும் குறைவான தொகை பரிமாறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், அசோக் கெலாட் போட்டி? ராகுல் இல்லையா?

இதையடுத்து, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையின் ரொக்க அளவு நன்கொடையில் 20 சதவீதம் அல்லது ரூ.20 கோடிக்குமிகாமல் இருக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு கொண்டு வரஇருக்கிறது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் செய்யும்செலவுகள் அனைத்தும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், அவற்றை காசோலை அல்லது டிஜிட்டல் பரிமாற்றமாக செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

click me!