காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள், ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும் என்று மண்டலவாரியாக தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்
வரும் 22ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 26 முதல் 28ம்ததேதிக்குள், தசராப் பண்டிகை தொடங்கியபின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சசி தரூர் டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, சசி தரூரிடம் “ தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தும். தேர்தலில் போட்டியிடுவது உங்கள் விருப்பம்” என சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி, தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதிய ஜி-23 தலைவர்களில் சசி தரூரும் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்கூறுகையில் “ காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், வரவேற்கப்படுகிறார்கள். இது ஜனநாயக அடிப்படையிலான தேர்தல், யாரும் போட்டியிட மற்றவர்களிடம் அனுமதி பெறத் தேவையில்லை.”எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 22ம் தேதி வெளியிடப்படுகிறது. இதன்பின்புதான் தலைவர் பதிவிக்கு யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரியவரும்.
ஜி-23 தலைவர்கள் சார்பில் சசி தரூரை நிறுத்த முடியு செய்துள்ளார்கள். ஆனால், கட்சியின் தீவிர விசுவாசிகள் சார்பில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட உள்ளார் எனத் தக வல்கள் தெரிவிக்கின்றன
Kerala guv vs CM row: ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த பின்னர் ஆடியோவை வெளியிட்ட கேரள ஆளுநர்!!
ஒருவேளை காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவியையை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லி வர வேண்டும்.
இந்தச் சூழலில் இருவரையும் தவிர்த்துப் பார்த்தால், முகுல் வாஸ்னிக், மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேஇருவரும் போட்டிக்களத்தில் உள்ளனர். இருவருமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகமான வாய்ப்புள்ளது.
22ம் தேதி தேர்தல் அறிவிக்கைப்பின், 24ம் தேதி முதல் 30ம் தேதிவரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதற்கிடையே பல்வேறு மாநில காங்கிரஸ் பிரிவுகள், ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.