ராஜஸ்தானின் பார்மரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி மோடியை பிக்பாக்கெட் என்று சொன்னதற்காக பாஜக புகார் அளித்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தானின் பார்மரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி மோடியை பிக்பாக்கெட் என்று சொன்னதற்காக பாஜக புகார் அளித்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
“ஒரு பிரதமரை பிக்பாக்கெட் உடன் ஒப்பிடுவதும், கெட்ட சகுனம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதும் ஒரு தேசிய கட்சியின் மூத்த தலைவருக்கு பொருத்தமான பேச்சு அல்ல என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 14,00,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என பாஜக வலியுறுத்தி உள்ளது'' என தேர்தல் கமிஷன் நோட்டீஸில் கூறியுள்ளது.
undefined
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்! ரூ.100 கோடி மோசடியில் என்ன தொடர்பு?
தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது. அதன் பேரில் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பதில் அளிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
“பிக்பாக்கெட்காரன் தனியாக வருவதில்லை, மூன்று பேர் இருக்கிறார்கள். முன்னால் இருந்து ஒருவர், பின்னால் இருந்து ஒருவர், தூரத்தில் இருந்து ஒருவர்... உங்கள் கவனத்தைத் திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. அவர் முன்னால் இருந்து தொலைக்காட்சியில் வந்து இந்து-முஸ்லிம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பற்றிப் பேசி பொதுமக்களை திசைதிருப்புகிறார். அப்போது, அதானி பின்னால் வந்து பணத்தை திருடிக்கொள்கிறார்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
“எந்த நபரையும் பிக்பாக்கெட்காரன் என்று அழைப்பது மோசமான துஷ்பிரயோகம். இது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, அவரது நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று பாஜக தனது புகாரில் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D