
மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
68 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையில் நிறைவடைந்த நிலையில் தற்போது நில அதிர்வால் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர் மணிப்பூர் மக்கள்…
அங்குள்ள சண்டல் மாவட்டத்தில் இன்று காலை 7.15 மணிக்கு லேசான நில அதிர்வும் ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அச்சம் அடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு ரிக்டர் ஸ்கேலில் முறையே 3.5., மற்றும் 5 ஆக பதிவாகி உள்ளது…..இவ்விரு நில அதிர்வின் தாக்கம் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று அஞ்சப்படுகிறது