இமயமலையில் நிலநடுக்கமா? 30 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்; தமிழ்நாடு இருக்கிறதா?

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் இமயமலையில் ஏற்படவுள்ள பூகம்பம் குறித்த எச்சரிக்கை தகவல்களை உள்ளடக்கியது. இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் பாதிப்பிற்கான காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

Earthquake hit Himalaya; 30 crore people will be affected in India

Earthquake hit Himalaya
மியான்மரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடந்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கையும் பாதித்தது. இந்த நிலநடுக்கத்திற்கு மியான்மரில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் ஏற்பட்டு இருந்த நிலநடுக்கம் 300 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இன்வா மேம்பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. கட்டிடங்கள் சுக்கு நூறாக இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் சாகைங் கோட்டில் ஏற்பட்ட ஒரு strike-slip fault காரணமாக ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இது பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை காட்டுவதாக அமைந்து இருந்தது. இந்தியாவிலும் இதுபோன்ற நிலநடுக்கம் இருக்கும், ஆனால் எப்போது என்ற அச்சம் நிலவி வருகிறது.

Himalaya Earthquake
இமயமலையில் பூகம்பம் ஏற்படும் என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். 8 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான "மகா இமயமலை பூகம்பம்" வட இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. "இந்தியா ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தெற்கு விளிம்பிலிருந்து 2 மீட்டர் கீழே சரிகிறது," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பிரபல அமெரிக்க புவி இயற்பியலாளர் ரோஜர் பில்ஹாம் விளக்கி இருந்தார். "துரதிர்ஷ்டவசமாக, அதன் வடக்கு விளிம்பு சீராக சரியவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவும் ஆபத்துக்கு உட்பட்டது. எப்போது வேண்டுமானாலும் சரியலாம். தவிர்க்க முடியாதது என்று ரோஜர் பில்ஹாம் தெரிவித்துள்ளார்.

Latest Videos

கரப்பான் பூச்சிகள் உதவியுடன் நடந்த மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணி! வைரல் வீடியோ!

Himalaya Earthquake 8 richter scale
மேலும் அவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''8 ரிக்டர் அளவைத் தாண்டிய நிலநடுக்கங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இமயமலையை தாக்கியுள்ளன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக, இமயமலை வளைவில் உருவாகும் அழுத்தத்தை விடுவிக்கும் அளவுக்கு பெரிய நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை. அது நிகழ்ந்தே ஆக வேண்டும், சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்பது இல்லை'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து! அடுத்த நிலநடுக்கம் இங்கு தான் - அரசு அதிர்ச்சி ரிபோர்ட்
 
நிலநடுக்கம் இந்தியாவில் எந்த மாநிலங்கள் பாதிக்கப்படும்?
இந்தியாவின் பாதி அளவுக்கான நிலப்பரப்பு அதாவது 59 சதவீதம் இமயமலை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், உள்பட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் ஆபத்தான நிலையில் உள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களும் ஆபத்தான லைனில் தான் அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏன் இந்தியாவில் பாதிப்பு அதிகம்?
இந்தியா போன்ற நாடுகளில் நிலநடுக்கத்தை தாங்கும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 10 பில்லியன் டாலர் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டு நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 7 பில்லியன் டாலர் அளவிற்கான பாதிப்பு இருந்தது. காரணம், போதிய நடைமுறை விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை எழுப்புவது தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இதே அளவிற்கு ஜப்பான் போன்ற நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால், பெரிய அளவில் சேதாரம் ஏற்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

vuukle one pixel image
click me!