உண்மையிலேயே முஸ்லீம்கள் மீது அக்கறை இருந்தால் அவர்களை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் அக்கட்சிக்கு பிரதமர் மோடி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
PM Modi challenges Congress: உண்மையிலேயே முஸ்லீம்கள் மீது அக்கறை இருந்தால். முஸ்லிம் கட்சித் தலைவரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலை சாடியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஹரியானாவின் ஹிசாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார். ஒரு முஸ்லிம் தலைவரை அதன் தலைவராக நியமிக்க கட்சிக்கு சவால் விடுத்தார்.
காங்கிரசை கடுமையாக சாடிய மோடி
திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தை எதிர்த்ததற்காக அவர் காங்கிரஸ் கட்சியை சாடினார். காங்கிரஸ் எப்போதும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை சமாதானப்படுத்தி வருகிறது. மேலும் புதிய சட்டத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பு அதையே நிரூபிக்கிறது என்றும் கூறினார். ''முஸ்லிம்கள் மீது உங்களுக்கு இவ்வளவு அனுதாபம் இருந்தால், ஏன் ஒரு முஸ்லிமை கட்சித் தலைவராக்கக்கூடாது? தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50 சதவீத இடங்களை கொடுங்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.
வக்ஃப் சட்டம் குறித்து பேச்சு
"காங்கிரஸ் சில அடிப்படைவாதிகளை மட்டுமே மகிழ்வித்துள்ளது. மீதமுள்ள சமூகம் பரிதாபகரமானதாகவும், படிக்காததாகவும், ஏழைகளாகவும் உள்ளது. "திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தை எதிர்ப்பதே காங்கிரஸின் இந்த தீய கொள்கைக்கு மிகப்பெரிய சான்று" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின் கீழ், இந்தியாவில் எங்கும் பழங்குடி சமூகங்களின் நிலம் அல்லது சொத்தில் தலையிட வக்ஃப் வாரியத்திற்கு இனி அதிகாரம் இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
காசியில் புதிய வளர்ச்சிப் பயணம்; ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்கலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி!
இதுவே உண்மையான சமூக நீதி: Modi
"புதிய விதிகள் வக்ஃப்பின் புனித உணர்வை மதிக்கும். முஸ்லிம் சமூகத்தின் ஏழை மற்றும் பாஸ்மண்டா குடும்பங்கள், பெண்கள், குறிப்பாக முஸ்லிம் விதவைகள் மற்றும் குழந்தைகள் தங்கள் உரிமைகளைப் பெறுவார்கள், அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். இதுவே உண்மையான சமூக நீதி" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசியலமைப்பை மிதித்த காங்கிரஸ் - Modi
அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாக காங்கிரஸ் மாற்றியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ''அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாக காங்கிரஸ் மாற்றியது. அந்த அதிகாரம் தங்கள் கைகளில் இருந்து நழுவுவதாக அவர்கள் உணர்ந்த போதெல்லாம், அவசரநிலையின் போது செய்தது போலவே, அரசியலமைப்பை அவர்கள் மிதித்தார்கள்" என்று பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மகாவீரரின் தொலைநோக்கு பார்வையை மத்திய அரசு நிறைவேற்றும்: பிரதமர் மோடி உறுதி!