பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, பெல்ஜிய குடியுரிமை பெற்றுள்ளார். அவரை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதா? சிபிஐ தீவிர விசாரணை.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி:
Mehul Choksi: மெகுல் சோக்சி மற்றும் இவரது உறவினர் நீரவ் மோடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய அளவிற்கு மெகுல் சோக்சி மற்றும் இவரது உறவினர் நீரவ் மோடி கடன் பெற்று இருந்தனர். இறுதியில் இந்தக் கடனை செலுத்தாமல் 2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜிய குடியுரிமை பெற்றவர். மனைவி பிரீத்தி சோக்சியுடன் பெல்ஜியத்தில் 'எஃப் ரெசிடென்சி கார்டு' பெற்ற பிறகு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடி வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சி நவம்பர் 15, 2023 அன்று பெல்ஜியத்தின் குடியுரிமை பெற்று இருக்கிறார்.
பெல்ஜியத்தில் மனைவி பிரீத்தி சோக்சியுடன் மெகுல் சோக்சி:
Punjab National Bank: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தற்போது மெகுல் சோக்சி இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெல்ஜியத்தில் இந்தியாவுக்கு மெகுல் சோக்சியை கொண்டு வருவதற்கு சிபிஐ கோரிக்கை வைத்து இருக்கிறது. மெகுல் சோக்சி மார்ச், 2025 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் இருக்கிறார் என்பது சிபிஐ-க்கு தெரிய வந்த பின்னர் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. மும்பை நீதிமன்றம் 2018, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து பிணையில் வெளிவர முடியாத 2 வாரண்டுகளை பிறப்பித்து இருந்தது.
மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கலா?
மெகுல் சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று இருப்பதால், இவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது என்று கூறப்பட்டது. இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அனுமதியும் இருக்கிறது. இவர் மீது பல்வேறு பொருளாதார குற்றச்சாட்டுக்கள் இருந்த காரணத்தால் இவரை இந்திய அரசு Fugitive Economic Offender - அதாவது தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவித்து இருந்தது.
மெகுல் சோக்சி மோசடி செய்தது எப்படி?
கடந்த 2022ஆம் ஆண்டு அமலாக்கத்துறையும் மெகுல் சோக்சி மற்றும் இவரது மனைவி பிரீத்தி சோக்சி மீது மூன்றாவது குற்றச்சாட்டை பதிவு செய்து இருந்தது. சோக்சி, அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் பிற "சில வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து, LOU-க்களை (உறுதிமொழி கடிதங்கள்) மோசடியாகப் பெற்று, FLC-களை (வெளிநாட்டு கடன் கடிதம்) வாங்கி, வங்கிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக ED - அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. சோக்சி மீது ED இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. சிபிஐயும் இதேபோன்ற குற்றப்பத்திரிகைகளை அவர் மீது தாக்கல் செய்துள்ளது.
பெல்ஜியத்தில் இருக்கும் மெஹுல் சோக்சியை நாடுகடத்துவதில் தாமதம் ஏன்?
சோக்சியின் ஆன்டிகுவா குடியுரிமை:
டொமினிகன் குடியரசில் 2021 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சோக்சி கைது செய்யப்பட்டார். அவரது காவலைப் பெறுவதற்காக ஒரு சிபிஐ குழு கரீபியன் நாட்டிற்கு விரைந்தது. ஆனால், சோக்சியின் வழக்கறிஞர்கள், சிகிச்சைக்காக ஆன்டிகுவாவுக்கு சோக்சி திரும்ப வேண்டும் என்றும், பின்னர் விசாரணையை எதிர்கொள்ள அவர் திரும்புவார் என்றும் உறுதியளித்தனர். 51 நாட்கள் சிறையில் இருந்த பிறகு, சோக்சிக்கு பிரிட்டிஷ் ராணியின் தனியுரிமை கவுன்சிலிடமிருந்து நிவாரணம் கிடைத்தது. மீண்டும் சோக்சி ஆன்டிகுவாவுக்கு திரும்பினார். பின்னர், டொமினிகன் குடியரசில் அவர் மீதான சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
ரத்த புற்றுநோய் பதிப்பா சோக்சிக்கு?
பெல்ஜியத்தில் குடியுரிமை பெறுவதற்காக சோக்சி போலியான ஆவணங்களை சமர்பித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், தான் இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் குடிமகன் என்பதையும் மறைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிப்ரவரியில், சோக்சி ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியத்தில் தங்கி இருப்பதாக அவரது வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.