டெல்லியில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
டெல்லியில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு

சுருக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக பதிவானது. 

டெல்லியில் இன்று காலை 7.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்தனா். நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

மேலும் இதே நேரத்தில் அய்ஸ்வால் மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டா் அளவுகாேளில் 3.7 ஆக இருந்தது.

நேற்று பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் 12 கிலாேமீட்டா் ஆழத்தில் 3.6 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!