
சல்மான்கான் சிறை செல்வாரா? மான் வேட்டை வழக்கில் இன்று தீர்ப்பு...
சல்மான்கான் மான் வேட்டையாடியதாக கூறப்படும் வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீா்ப்பு வழங்கப்படுகிறது.
படப்பிடிப்புக்காக கடந்த 1998ம் ஆண்டு அக்டோபரில் ராஜஸ்தான் சென்ற நடிகர் சல்மான் கான், அரியவகை மான்களை உரிமம் முடிந்துபோன துப்பாக்கிகளை வைத்து வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது,
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 18ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ஜோத்பூர் நீதிமன்றம் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சல்மான் கானுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, கலைமானை வேட்டையாடிய வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி நடிகர் சல்மான்கான் ஜோத்புருக்கு சென்றார். படப்பிடிப்பின் போது அவரும் வேறு சிலரும் மான் வேட்டையாடியதாக 1998ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.
சட்டவிரோதமாக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதையொட்டி, தமது சகோதரியுடன் நேற்றிரவு அவர் ஜோத்புர் வந்தடைந்தார்.
இன்று தீா்ப்பு வழங்கப்படுவதையாெட்டி, சல்மான் விடுதலை பெறுவரா அல்லது சிறை செல்வாரா என அவரது ரசிகா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.