உத்தரப்பிரதேச தோ்தல் ...அகிலேசுடன்  காங்கிரஸ் கூட்டணி!

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
உத்தரப்பிரதேச தோ்தல் ...அகிலேசுடன்  காங்கிரஸ் கூட்டணி!

சுருக்கம்

உத்தரப்பிரதேச தோ்தல் ...அகிலேசுடன்  காங்கிரஸ் கூட்டணி!

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

403 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் என்பதை அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையம், அவருக்கே சைக்கிள் சின்னம் வழங்கப்படுவதாக அறிவித்தது.

சைக்கிள் சின்னத்தை கோரிய முலாயம் சிங்கின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும் சமாஜ்வாடி கட்சி, அகிலேஷ் யாதவுக்கு சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இன்று அது குறித்த முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு சுமார் 80 முதல் 90 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராஷ்டிரிய லேக் தளம் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!