பசுவதையை நிறுத்தினால் உலக பிரச்னைகள் தீர்ந்துவிடும்: குஜராத் நீதிமன்றம்

By SG BalanFirst Published Jan 23, 2023, 4:01 PM IST
Highlights

பசுக்களைக் கொல்வதை நிறுத்தினால் உலகப் பிரச்சினைகள் இல்லாம் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தியதாக 22 வயது இளைஞர் முகமது அமீன் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கின் விசாரணை குஜராத் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கின் தீர்ப்பில், பசுக்களைப் பற்றி நீதிபதி சொல்லியிருக்கும் பல செய்திகள் கவனிக்கவேண்டியவை.

“பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் எல்லா செல்வங்களும் இருக்கும். பசுக்கள் கவலையுடன் இருந்தால் அந்த இடத்தில் செல்வங்கள் அழிந்துவிடும். பசு வெறும் விலங்கு அல்ல, அது ஒரு தாய். அதில்தான் தேவர்கள் வாழ்கிறார்கள்ழ எனவே, பசுவை பாதுகாக்கவேண்டியது கட்டாயம்.” என்று நீதிபதி கூறியுள்ளார்.

மேலும், “பசுவின் சாணியை வீடுகளில் பூசினால் அணுக்கதிர் வீச்சு பாதிப்பு தடுக்கப்படும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பசு பூமியில் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்றுதான் உலகத்தின் பிரச்னைககள் எல்லாம் தீரும். பசுவதையை முழுமையாக நிறுத்தும் வரை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பும் குறையாது” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

click me!