Rahul Gandhi Marriage: எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? மனம் திறந்த ராகுல் காந்தி

By Pothy RajFirst Published Jan 23, 2023, 3:35 PM IST
Highlights

சரியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால், பிரச்சினை என்னவென்றால், என்னுடைய பெற்றோர் அழகான திருமணம் உயர்ந்த அளவு கோலை வைத்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்

சரியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால், பிரச்சினை என்னவென்றால், என்னுடைய பெற்றோர் அழகான திருமணம் உயர்ந்த அளவு கோலை வைத்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்,ஹரியானா, டெல்லி, பஞ்சாப் சென்று தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் சென்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய யாத்திரையை ராகுல் காந்தி வரும் 30ம் தேதி முடிக்கிறார்

பாலக்காடு பகுதியில் 2 ஆண்டுகளாக அட்டூழியம் செய்த யானையை மயக்கஊசி மூலம் பிடித்தனர்: கும்கியாக மாறுகிறது

இதற்கிடையே ராகுல் காந்தி, யூடியூப் தளம் ஒன்றுக்கு மனம்திறந்து பேட்டியளித்துள்ளார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, உணவுகள், கல்வி முறை, முதன்முதலில் வேலைக்கு சென்றஇடம், வாங்கிய ஊதியம் எனப் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். 

ராகுல் காந்தியிடம் திருமணம் செய்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சிரி்த்துக்கொண்டே பதில் அளிக்கையில் “ நான் திருமணத்துக்கு எதிரி அல்ல. என் பிரச்சினையின் பகுதி என்னவென்றால், என் பெற்றோர் ஒருவொருக்கொருவர் காதலித்து அழகான திருமணம் செய்தனர்.

ஆதலால் என்னுடைய அளவுகோல் உயர்வாக இருக்கிறது. சரியான பெண் வரும்போது நிச்சயம் திருமணம் செய்வேன். அதாவது, அந்த பெண் என்கூட வர வேண்டும். இப்படித்தான் பெண் இருக்கவேண்டும் என்ற அளவுகோல்இல்லை, அன்பான, அறிவார்ந்தவராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

நேதாஜிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இலக்கு ஒன்றுதான்! மோகன் பகவத் பேச்சு

உணவுமுறை, பிடித்த உணவுகள் குறித்து ராகுல் காந்தி பகிர்கையில் “ தெலங்கானா உணவுகள் சிறிது காரமாகவும் இருந்தது. அதிலும் மிளகாயின் காரம் தூக்கலாக இருந்தது. ஆனால், நான் காரம் அதிகமாக சாப்பிடமாட்டேன். எங்கள் வீட்டில் இந்திய மக்கள் சாப்பிடும் உணவுதான் சமைக்கிறோம். இரவுநேரத்தில் மட்டும் உணவு சற்று மாறுபட்டு இருக்கும்

பெரும்பாலும் நான் உணவு முறையில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதால், இனிப்பு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவேன்.

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் இன்று தேசத்துக்கு அர்ப்பணிப்பு: கப்பலின் முழு விவரங்கள்!

எனக்கு பிடித்த உணவுகள் என்றால், சிக்கன் டிக்கா, ஷேக் கபாப், ஆம்லெட் பிடிக்கும், காலைநேரத்தில் காபி சாப்பிட பிடிக்கும். நான் பெரும்பாலும் டெல்லியில் இருந்தால், மோதி மஹால், சாஹர், ஸ்வாகத், சரவணபவனில் சாப்பிடப் பிடிக்கும்”  எனத் தெரிவித்தார்
 

click me!