4 மாதத்தில் ஓய்வு பெற இருந்த தலைமைச் செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கொரோனா ரூபத்தில் காத்திருந்த எமன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 30, 2021, 6:17 PM IST
Highlights

இந்நிலையில் பீகார் மாநில தலைமைச் செயலாளர் கொரோனாவுக்கு பலியான விவகாரம் அம்மாநில மக்களையும், அரசு அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா 2வது அலையால் மக்கள் கொத்து, கொத்தாக மடியும் அவலம் அரங்கேறி வருகிறது.  தினந்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் உயிரிழப்பு 3000ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி கொரோனா தொற்றுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநில தலைமைச் செயலாளர் கொரோனாவுக்கு பலியான விவகாரம் அம்மாநில மக்களையும், அரசு அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  அவர் பட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்னும் 4 மாதத்தில் அதாவது ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஓய்வு பெற காத்திருந்த அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

click me!