
காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுமாறு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. 1990 களின் நினைவுகள் மற்றும் பயத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்போது சிறுபான்மை மக்களான பண்டிட்கள் இஸ்லாத்திற்கு மாறுங்கள் இல்லையென்றால் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு மிரட்டல் கடிதங்களைப் பெற்றனர்.
இம்முறை, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மிரட்டல் கடிதங்களை உள்ளூர் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-இஸ்லாம் வெளியிட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. லஷ்கர்-இ-இஸ்லாம் வெளியிட்ட மிரட்டல் கடிதங்கள் ஹவாலில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் பாரமுல்லாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்த கடிதத்தில், 'காஷ்மீர் பண்டிட்களை உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடுகிறோம், இல்லையெனில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும் - நாங்கள் உங்களை பயமுறுத்தவில்லை, ஆனால் இந்த நிலம் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் மட்டுமே, இது அல்லாஹ்வின் பூமி, இந்துக்களால் இங்கே இருக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதி, பம்பாய் கக்ரான் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் சிங் என்பவரும் ஏப்ரல் 4 ஆம் தேதி, மருந்துக் கடை நடத்தி வரும் பால் கிரிஷன் பட் என்பவரும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவரது கடைக்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றது. இச்சம்பவத்திற்குப் பிறகு, காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலையை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது.
ஜம்மு காஷ்மீரின் அமைதி மன்றத்தின் தலைவர் சதீஷ் மஹல்தார் காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரின் இன, கலாச்சார, மத மற்றும் மொழி அடையாளத்தை பாதுகாக்க பெரும்பான்மை மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காஷ்மீர் பண்டிட்டுகள் வன்முறை மற்றும் இறப்பு வதந்திகளில் மூழ்கியுள்ள இந்த நேரத்தில், பெரும்பான்மை மக்கள் முன்வர வேண்டும். சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் தங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்தவும், அவர்களின் கலாச்சாரம், மொழி, மதம், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்க பெரும்பான்மை மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மதம், இனம், மொழி என எதுவாக இருந்தாலும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை. இது ஒரு சுய-வெளிப்படையான விதி. இது மனிதகுலத்தின் உலகளாவிய தன்மையில் உறுதியாக வேரூன்றிய ஒரு விதி என்று அவர் தெரிவித்துள்ளார்.பன்மைத்துவம் நமது பலமாக இருக்க வேண்டும். நமது வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது. நமது தனித்துவமான பலத்தை நாம் குறைக்கவோ கூடாது என்று தெரிவித்தார்.