அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி ஒருவர் கோவிலின் கருவறைக்குள் நுழைய முற்பட்ட போது, அர்ச்சகர்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம், பன்னாவில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பன்னாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராணி, ஜென்மாஷ்டமி அன்று நடைபெற்ற பூஜையின் போது கோவிலில் சலசலப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தன்று ராணி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
undefined
கோவிலின் கண்ணியத்தை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வைரலான வீடியோவில், ராணி ஜிதேஸ்வரி ஜன்மாஷ்டிமி ஆரத்தியின் போது தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், பூசாரிகளும், உள்ளூர் மக்களும் அவர் கோவில் கருவறைக்குள் நுழைந்த போது அர்ச்சகர்களால் வெளியே இழுத்து செல்லப்பட்டார்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அப்போது குடிபோதையில் இல்லை. அவர் விதவை என்பதாலே அவர் கருவறைக்குள் நுழைய விடவில்லை என்றும் மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மத்தியப்பிரதேசம்: அரச குடும்பத்தை சார்ந்த இராணி, தான் விதவை என்பதால் தீட்டு பட்டுவிடும் எனக் கூறி கோவில் கருவறைக்குள் வழிப்பட அனுமதிக்கப்படாத நிலையில் எதிர்ப்பை மீறி கருவறைக்குள் சென்றதால் அர்ச்சகர்களால் இழுத்து வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.… pic.twitter.com/ml0UBpfWYB
— Asianetnews Tamil (@AsianetNewsTM)கோயில் கமிட்டியின் புகாரின் பேரில், சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் ராணி ஜிதேஸ்வரி மீது ஐபிசி 295 ஏ பிரிவின் கீழ் மது அருந்தி கோயிலின் கண்ணியத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி
ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்