Mumbai : போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக, பெற்ற குழந்தைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள் உட்பட 3 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அந்தேரியில் இருந்து ஒரு மாத பெண் குழந்தையை வெள்ளிக்கிழமை மீட்ட போலீசார், விற்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பெற்றோர் ஷபீர் மற்றும் சானியா கான் மற்றும் ஷகீல் மக்ரானி என்ற நபர் ஆகியோர் அடங்குவர். விற்பனையில் கமிஷன் வாங்கியதாகக் கூறப்படும் ஏஜென்ட் உஷா ரத்தோட் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"போதைக்கு அடிமையான அந்த தம்பதியினர், தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த தம்பதியின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் தான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
undefined
குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் அந்த ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றனர்" என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி தயா நாயக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஷபீர்கான், அவரது மனைவி சானியா, உஷா ரத்தோர், ஷகீல் மக்ரானி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
"அந்த பெற்றோரால் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஷபீரின் சகோதரி ரூபினா கான் இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் மற்றும் அண்ணி மீது கோபமடைந்த அவர், உடனடியாக டி.என்.நகர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.