59 வயதாகும் பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவர்களுடன் இந்தியாவின் ரகசியத் தகவல்களை பகிர்ந்துகொண்டார் என்றும் டிஆர்டிஓ நிர்வாகம் புகார் அளித்தது.
இந்தியாவின் ஏவுகணை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்ததாக எழுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பொறியியல் பிரிவு இயக்குநராக இருந்தவர் பிரதீப் குருல்கர். 59 வயதாகும் இவர் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவர்களுடன் இந்தியாவின் ரகசியத் தகவல்களை பகிர்ந்துகொண்டார் என்றும் டிஆர்டிஓ நிர்வாகம் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த மே 3ஆம் தேதி பிரதீப் குருல்கர் மீது புனேவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்ததுு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரயான் 3 விண்ணில் பாயும்போது நேரில் பார்க்கணுமா? மிஸ் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணுங்க!
இந்நிலையில், இந்த வழக்கில் புனே பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பிரதீப் குருல்கர் ஜூன் 2022 முதல் டிசம்பர் 2022 வரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும், ஷாரா தாஸ்குப்தா என்ற பெண் ஏஜென்ட்டுடன் வாட்ஸ் ஆப் மூலம் பேசிவந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பெண் விரித்த வலையில் சிக்கியதில் இருந்து, பிரதீப் இந்தியாவின் ரகசிய தகவல்களை அவருக்குக் கூறிவந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த ரகசியங்களை கசிய விட்டார் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறது. பிரம்மோஸ் லாஞ்சர், ட்ரோன், யுசிவி, அக்னி ஏவுகணை மற்றும் ராணுவ பிரிட்ஜிங் சிஸ்டம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜென்ட் பெற முயன்றார்.
கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு! சித்தராமையா கொடுத்த வாக்குறுதி!
தாஸ்குப்தா இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் எனக் கூறிக்கொண்டு, ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பி பிரதீப் குருல்கருடன் நட்பு கொண்டிருக்கிறார். விசாரணையில், அவரது IP முகவரி பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.