பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைமையிலான தெலங்கானா மாநில அரசாங்கத்தை கடுமையாக பிரதார் மோடி கடுமையாக சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானாவின் வாரங்கலில் இன்று 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைமையிலான தெலங்கானா மாநில அரசாங்கத்தை கடுமையாக சாடினார். தெலங்கானா முதலமைச்சர் கேச் சந்திரசேகர் ராவ் என்றும் அழைக்கப்படும் கேசிஆர் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்டார், மற்றவர்களுக்காக அல்ல என்றும் பிரதமர் விமர்சித்தார். மேலும் வாரிசு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்களை பிரதமர் எச்சரித்தார். பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு மக்களை மோடி வலியுறுத்தினார்.
மேலும் “ கே.சி.ஆர் அரசு என்பது அதிக ஊழல் நிறைந்த அரசு என்று அர்த்தம். தற்போது அவர்களின் ஊழல் டெல்லியிலும் பரவியுள்ளது. தங்களது முழு ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசையும், வாரிசு அரசியலையும் கண்டிப்பதில் மட்டுமே பிஆர்எஸ் அரசு ஈடுபட்டதாகவும், அதன் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு ஏதாவது வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தெலுங்கானா மக்களின் கவனத்தை திசை திருப்ப பிஆர்எஸ் அரசு பல்வேறு தந்திரங்களை முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு தெலுங்கானாவில் இணைப்பை பலப்படுத்தி வருகிறது, இது மக்களுக்கு பயனளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். தெலுங்கானா புதிதாகப் பிறந்த மாநிலமாக இருக்கலாம், ஆனால் அது நாட்டின் வரலாற்றில் பங்களித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்ற் தனது தெலுங்கானா பயணத்தின் போது வாரங்கலில் சுமார் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள ரயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நவீன உற்பத்தி அலகு மேம்படுத்தப்பட்ட வேகன் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும். இது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காகதீயா அரசின் தலைநகரான வாரங்கலில் உள்ள புகழ்பெற்ற தேவி பத்ரகாளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
தெலுங்கானாவில் பிரதமர் மோடி வருகையைப் புறக்கணித்த கேசிஆர்