Draupadi murmu : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்தில் மின்சார இனைப்பு வழங்கும் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் விரைவில் முடியவிருக்கிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.
இதில் திரௌபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்தில் மின்சார இனைப்பு வழங்கும் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. திரௌபதி முர்முவின் பூர்வீக கிராமமான உபார்பேடா கிராமத்திற்கு முதன்முதலாக தற்போது முழு மின்சார வசதி கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
திரௌபதி முர்மு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், அவசர அவசரமாக அங்கு மின் இணைப்புகள் பொருத்தப்படுகின்றன. இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல அருகே உள்ள துங்குர்சாஹி கிராமத்திலும் மின்சார வசதி இல்லை.
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
மின்சார வசதி
கடந்த வார சனிக்கிழமையன்று ‘டாடா பவர் நார்த் ஒடிசா டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட்’ அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 38 மின் கம்பங்கள் மற்றும் 900 மீட்டர் கேபிள்கள், கண்டக்டர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஒரு டிரக் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களுடன் உபர்பேடாவை அடைந்தனர்.
முழு உபர்பேடா கிராமத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நிறுவனத்தின் மயூர்பஞ்ச் பிரிவுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம் என்றும் செய்தியாளர்களிடம் அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு