#Breaking: AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது... டெல்லி காவல்துறை அதிரடி!!

By Narendran SFirst Published Jun 27, 2022, 8:22 PM IST
Highlights

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டதை டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா உறுதி செய்தார். இன்று PS-Special Cell இல் IPC பிரிவு 153A/295A இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, போதுமான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். இதுக்குறித்து AltNews-ன் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுக்குறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Please note. pic.twitter.com/gMmassggbx

— Pratik Sinha (@free_thinker)

மேலும் இதுக்குறித்த பிரதிக் சின்ஹாவின் டிவிட்டர் பதிவில், 2020 ஆம் ஆண்டி வழக்கு விசாரணைக்காக ஜுபைர் இன்று டெல்லி சிறப்புப் பிரிவால் அழைக்கப்பட்டார். அந்த வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு இருந்தது. இருப்பினும், இன்று அவர் வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட பிரிவுகளுக்கு சட்டத்தின் கீழ் கட்டாயமாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.  பலமுறை கோரிக்கை விடுத்தும் எப்ஐஆர் நகல் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். காவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!