நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை… இதுதான் காரணம்!!

By Narendran SFirst Published Jun 27, 2022, 7:32 PM IST
Highlights

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கின் லலித்பூர் பெருநகரத்தில் காலரா வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 12 பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பானி பூரி விற்பனை செய்யவும் விநியோகம் செய்யவும் தடை விதிப்பது என்று லலித்பூர் மாநகராடசி முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பானி பூரியில் வழங்கப்படும் தண்ணீர் மூலமாக காலரா நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தலைநகரின் வெவ்வேறு பகுதிகளில் ஐந்து காலரா வழக்குகள் கண்டறியப்பட்டன. பாதிக்கப்பட்ட இருவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில், காலரா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில் வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் பிற நீர் மூலம் பரவும் நோய்கள் பரவி வருவதால், அனைவரும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்குப் பகுதியில் மேலும் காலரா பரவாமல் தடுக்கும் வகையில் கூட்டம் அதிகம் கொண்ட பகுதிகளில் மற்றும் முக்கிய வளாகங்களில் பானிபூரியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

click me!