சீறிப்பாயும் வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நபர்! வைரல் வீடியோவுக்கு குவியும் பாராட்டு!

By SG Balan  |  First Published Jul 13, 2023, 1:12 PM IST

ஓடும் நிலையில் வெள்ள நீரில் சிக்கிய நாயை ஒருவர் மீட்கும் வீடியோ சண்டிகர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.


சண்டிகரில் உள்ள பாலத்தின் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் வெள்ள நீரில் சிக்கிய நாயை ஒருவர் மீட்கும் வீடியோ சண்டிகர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வெளியானது முதல் இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.

உயிரை துச்சமாக நினைத்து நாயைக் காப்பாற்றிய நபரை நெட்டிசன்கள் பாராட்டு மழையில் நனைய வைத்து வருகிறார்கள். நாய்க்குட்டிக்கு சரியான நேரத்தில் உதவியதால் அதன் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என பலரும் கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

"சண்டிகர் போலீஸ் குழுவின் உதவியுடன் தீயணைப்புத் துறையின் குழுவிற்கு பாராட்டுகள். குடா லாகூர் பாலத்தின் கீழ் பாய்ந்து செல்லும் நீரில் சிக்கித் தவித்த நாய்க்குட்டி மீட்கப்பட்டது" என்று பாராட்டியுள்ளனர். சிலரது ட்வீட்டில் "#EveryoneIsImportantForUs", "#LetsBringTheChange", "#WeCareForYou" போன்ற ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தத்தளிக்கும் டெல்லி; நகருக்குள் புகுந்த யமுனை நதி வெள்ளம்; தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

Kudos to team of Fire department assisted by Chandigarh police team, a puppy stranded under Khuda Lahore bridge due to heavy water flow was Rescued. pic.twitter.com/yHtZuBLgvy

— SSP UT Chandigarh (@ssputchandigarh)

காப்பாற்றிய நாயுடன் ஏணியில் ஏறி வரும் நபருக்கு மற்றொரு நபர் கை கொடுத்து மேலை வர உதவும் காட்சி வீடியோவில் உள்ளது.  ஜூலை 10ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

"புத்திசாலித்தனமான முயற்சி. இந்த நேரத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது" என்று ஒருவர் பதில் அளித்துள்ளார். இன்னொருவர், "அருமையான வேலை.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று எழுதியுள்ளார். "சண்டிகர் காவல்துறைக்கு வாழ்த்துக்கள்" என்றும் ஒவருவர் கூறியுள்ளார்.

ஹரியானா எம்எல்ஏ கன்னத்தில் பளார்! வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் சீற்றம்!

click me!