நன்கொடை வாங்கியதில் பாரதிய ஜனதாவுக்கு முதலிடம்……கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக

First Published Dec 21, 2016, 11:21 PM IST
Highlights
நன்கொடை வாங்கியதில் பாரதிய ஜனதாவுக்கு முதலிடம்……கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக

கடந்த 2015-16ம் ஆண்டு நாட்டில் 7 முக்கிய தேசிய கட்சிகளில் ரூ. 20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெற்றதில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே முதலிடம் வகிக்கிறது.

இந்த கட்சி 613 பேரிடம் இருந்து ரூ.76 கோடி நன்கொடையாக வசூலித்துள்ளது.

Latest Videos

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தேசிய கட்சிகளாகும்.

இந்த 7 தேசிய கட்சிகள் இணைந்து, ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக, 1,744 பேரிடம் இருந்து, ரூ.102 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளனர். இது கடந்த 2014-15ம் ஆண்டு பெற்ற நன்கொடையோடு ஒப்பிடுகையில், 84சதவீதம் குறைவாகும். அப்போது ரூ. 528.67 கோடி நன்கொடை பெற்று இருந்தனர் என தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி, கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக நன்கொடை பெறும் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. அதன்படி, ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான நன்கொடை பெற்ற தொகை குறித்து காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கவில்லை.

 

அரசியல் கட்சிகள் விடும் கதைகள்......

1. அரசியல் கட்சிகள்  ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக பெறும் நன்கொடைக்கு தேர்தல் ஆணையத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை.

2. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை.

3. பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.437 கோடி நன்கொடை பெற்று இருந்தது. கடந்த 2015-16ம் ஆண்டில் 82 சதவீதம் குறைந்து ரூ.76 கோடிதான் வாங்கியுள்ளதாம்.

4. பா.ஜனதா கட்சியின் நன்கொடை கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுகளுக்கு இடையே 156 சதவீதம் அதிகரித்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 137 சதவீதம் அதிகரித்துள்ளது.

5.சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நன்கொடை கடந்த 2014-15-ம் ஆண்டில் பெற்ற ரூ.38 கோடி நன்கொடை  பெற்றது. ஆனால், 2015-16ம் ஆண்டில் நன்கொடை என்பது 98 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

6. பகுஜன்சமாஜ் கட்சியை கடந்த 2015-16ம் ஆண்டில் மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளாக, யாரிடமும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெறவில்லையாம்.

7. ரொக்கமாக நன்கொடை வாங்கியதில் காங்கிரஸ் கட்சி ரூ. 20.42 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.81 கோடியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.58 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ. 65 லட்சமும் பெற்றுள்ளன.

 

 

tags
click me!