டாக்டர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்…. குழந்தைகள் இறந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்.பதிவுக்கு கடும் எதிர்ப்பு...

First Published Sep 4, 2017, 9:55 PM IST
Highlights
doctors one day strike in uttra predesh

உத்தரப்பிரதேசம், பரூக்காபாத் மாவட்ட மருத்துவமனையில் 49 குழந்தைகள் இறந்தது தொடர்பாக டாக்டர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர். பதிவை ரத்து செய்யாவிட்டால்,  ஒட்டுமொத்தமாக இன்று விடுமுறை எடுப்போம் என்று மருத்துவமனையில் உள்ள அனைத்து டாக்டர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

49 குழந்தைகள் மரணம்

பரூக்காபாத் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 49 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மூளை அழற்சி நோயாலும் இறந்தனர். இந்த சம்பவம் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 21-ந்தேதி வரை நடந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில அரசு, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, கண்காணிப்பாளர் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டது. இது குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட்டுள்ளது.

அறிக்கை வாபஸ்

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில மருத்தவர்கள் சேவை அமைப்பின் சார்பில் நேற்று அவசரக்கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கபட்டது. அது குறித்து மாவட்ட அமைப்பின் செயலாளர் டாக்டர் யோகேந்திர சிங் நிருபர்களிடம் கூறுகையில், “ மாநில அரசு விசாரணை நடத்த அனுப்பிய மாஜிஸ்திரேட், எஸ்.டி.எம். ஆகியோருக்கு மருத்துவம் குறித்த ஆழ்ந்த அனுபவ அறிவு இல்லை. ஆதலால் அவர்கள் அளித்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். விசாரணைக் குழுவை நியாயமானதாக, அனுபவமுள்ளவர்களைக் கொண்டு நடத்த வேண்டும்.

ராஜினாமா

எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், வரும் 5 மற்றும் 6 தேதிகளில் அனைத்து டாக்டர்களும் ஒட்டுமொத்த விடுப்பு எடுப்போம். 7-ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் பணியை ராஜினாமா செய்வோம்’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களிடம் கூறியதாவது-

 குழந்தைகளின் இறந்த சம்பவத்துக்கு பின், பிரதமர் மோடியும், சுகாதாரத்துறையும் விழித்துக்கொள்வார்களா?. உபி. அரசுக்கு எதிராகவும், ஜார்கண்ட், உ.பி. சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா?

நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்த விசயத்தை முற்றிலும் ஒதுக்கித்தள்ளிய மத்திய சுகாதாரத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தைகள் இறப்பு குறித்து அறிக்கை வௌியிட வேண்டும். பா.ஜனதா கட்சி ஆளும் அரசுகள் குழந்தைக் இறந்த சம்பவத்தை நிராகரித்து அலட்சியப் போக்குடன் நடந்து, சுகாதாரத்துறை கட்டமைப்பை அழித்துவிட்டனர். அலட்சியத்தன்மை, மெத்தனப்போக்கு ஆகியவற்றின் வௌிப்பாடுதான் குழந்தைகள் இறப்பு நடந்துள்ளது. கோரக்பூரில் குழந்தைகள் மரணம் இதுவரை 357 ஆகவும், கடந்த 24மணி நேரத்தில் 13 குழந்தைகளும் இறந்துள்ளனர். முதல்வர் யோகி, இப்போது மாநிலத்தின் ‘ரோகி’ நோயாக மாறியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

click me!