மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 03:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Do you know Modi asset worth?

பிரதமர் நரேந்திர மோடி, தனது சொத்து மதிப்பு விவரத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கோடியே 13 ஆயிரத்து 403 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடி பதவியேற்றது உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சர்களின் சொத்து மதிப்பை வெளியிடுவதன் மூலம் அரசின் வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போராட்டம் ஆகியவற்றை மக்கள் புரிந்து கொள்வார் என்பதற்காகவே மோடி இதனை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கோடியே 13 ஆயிரத்து 403 ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ரூ.1.41 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ஒரு கோடியே 13 ஆயிரத்து 403 ரூபாயாக குறைந்துள்ளது.

பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளதை அடுத்து, அவருடன் அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ரவிசங்கர் பிரசாத், கிரண் ரிஜூஜூ உள்ளிட் 15 பேர் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?