பாகிஸ்தானை ஐநாவில் கிழித்தெறிந்த இந்தியா..! பாகிஸ்தானுக்கு டெரரிஸ்தான் என பெயரிட்டது இந்தியா..!

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 10:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
பாகிஸ்தானை ஐநாவில் கிழித்தெறிந்த இந்தியா..! பாகிஸ்தானுக்கு டெரரிஸ்தான் என பெயரிட்டது இந்தியா..!

சுருக்கம்

India tearing up Pakistan India named the Terroristan for Pakistan

பாகிஸ்தான் என்ற பெயருக்குப் பதிலாக டெரரிஸ்தான் என பெயரை மாற்றிக்கொள்ளலாம் என இந்தியா, ஐநா சபையில் விமர்சித்துள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக உலக அரங்கில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் எல்லைக்குள் தீவிரவாதிகளை ஏவிவிட்டு தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சம்பளத்திற்கு ஆள்வைத்து தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துகிறது.

ஐநா பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி, காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதோடு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு ஐநா கூட்டத்தில் ஐநாவுக்கான இந்திய முதன்மை செயலாளர் ஈனம் காம்பீர் தக்க பதிலடி கொடுத்தார்.

ஐநா கூட்டத்தில் ஈனம் காம்பீர் பேசியதாவது:

தீவிரவாதிகளை உற்பத்தி செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்துவரும் பாகிஸ்தான் டெரரிஸ்தானாக மாறியுள்ளது. ஓசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பும் தலிபான் தீவிரவாதத் தலைவரான முல்லா ஓமருக்கு அடைக்கலமும் அளித்த பாகிஸ்தான், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூற தகுதியில்லாத நாடு.

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருகிறார். பாகிஸ்தானின் அனைத்து தெருக்களிலும் தீவிரவாதிகள் உலா வருகின்றனர். 

உள்நாட்டில் தோல்வியடைந்த ஒரு நாட்டிடமிருந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த உலகிற்கு தேவையில்லை. காஷ்மீர் இன்றும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அளவிற்கு எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பயன்படுத்தினாலும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது.

இவ்வாறு பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஈனம் காம்பீர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!