
குடியரசு தலைவருக்கு மாதம் ரூ.5 லட்சமும், துணை குடியரசு தலைவருக்கு மாதம் ரூ.4 லட்சமும் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2018 - 19 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். நேர்மையான வெளிப்படையான அரசை நடத்துவோம் என 4 வருடங்களுக்கு முன்பு உறுதி அளித்திருந்தோம். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வலிமை அடைந்திருப்பதாகவும், விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்றும் கூறினார். அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.
நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் இதுவரையில்லாத அறிப்புகளில் விவசாய துறைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசயிகளுக்கான கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஊதியங்கள் உயர்த்தப்படுவதாக கூறினார். குடியரசு தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாகவும், குடியரசு துணை தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாகவும் உயர்த்தப்படுவதாக கூறினார்.
குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படுள்ளது என அவர் அறிவித்தார்.
அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 5 ஆண்டுக்கு ஒரு முறை பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினரிகளின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.