
பழைய, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தது.
ஆனால் 2௦௦௦ ருபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ள நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் வரவில்லை.
எனவே, இந்த 2௦௦௦ ருபாய் நோட்டுக்களுக்கு போதிய சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடையே, புதிய 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என கூறப்பட்டது..
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தற்போதைக்கு புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிய 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தால் சில்லறை பிரச்ச்சனைகள் தீரும் என்று பொது மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அருண் ஜெட்லி இந்த அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.