தொடர்ந்து 3 நாள் வேலை... வங்கி மேலாளர் மன அழுத்தத்தில் மரணம்

Asianet News Tamil  
Published : Nov 17, 2016, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
தொடர்ந்து 3 நாள் வேலை... வங்கி மேலாளர் மன அழுத்தத்தில் மரணம்

சுருக்கம்

அரியானா மாநிலத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் வேலை செய்ததால், ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பால் பலியானார்.

அரியானா மாநிலம், ரோடாக் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜேஸ் குமார்(வயது56). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களின் குடும்பம் குர்கானில் வசித்து வருகின்றனர்.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் வகையில்,  புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து, பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக்கொள்ள வங்கிக்கு படையெடுத்து வருகின்றனர். 

இதனால், மக்களின் கூட்டத்தைச் சமாளிக்க, வங்கிகளை காலையில் விரைவாகத் திறக்கச் சொல்லி, தாமதாக மூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், வங்கி ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், புதன்கிழமை காலை, வங்கியின் காவலாளி, உதவியாளர் மேலாளர் சுரேஷ்குமாரின் அறையை தட்டி சாவியைக் கேட்டுள்ளனர். நீண்டநேரம் கதவைத் தட்டியும் அறை திறக்கப்படாததையடுத்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்துப்பார்த்த போது, சுரேஷ்குமார் அவரின் இருக்கையில், இறந்து கிடந்தார். 

இது குறித்து சிவாஜி காலணி போலீஸ்நிலைய ஆய்வாளர் நீரஜ் குமார் கூறுகையில், “ கடுமையான பணிச்சுமை காரணமாக, மேலாளர் சுரேஷ் குமார் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல், அலுவலகத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஏற்கனவே இதயநோயாளியான சுரேஷ் குமார், கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் இருந்து வரும் பொது மக்கள் கூட்டம், அதைச் சமாளிக்க கூடுதல் நேரம் உழைப்பு, ஓய்வின்மை ஆகியவற்றால் இறந்துள்ளார்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!