தங்க கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட இர்ஷாத் கொல்லப்பட்டதும் திக்கொடியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இர்ஷாத்தின் சடலம் என்றும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
தங்க கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட இர்ஷாத் கொல்லப்பட்டதும் திக்கொடியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இர்ஷாத்தின் சடலம் என்றும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கடந்த மே 13ம் தேதி துபாயில் இருந்து வந்த இர்ஷாத், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மே 13 ஆம் தேதி துபாயில் இருந்து வந்த அவர், அலுவலக பணிக்காக செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மே 23 ஆம் தேதி கோழிக்கோடு சென்றார். ஜூலை முதல் வாரத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை ஒப்படைக்கவில்லை என்பதற்காக, கும்பல் அவரை பிணைக் கைதியாக வைத்திருப்பது தெரிய வந்தது. இர்ஷாத்தின் தாயார் நபீசா கூறுகையில், நாசர் என்ற நபரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் இர்ஷாத்தை கொன்றுவிட்டு உடலை சாக்கு மூட்டையில் போட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறினார். இர்ஷாத் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த காட்சிகளும் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளன. இருப்பினும், குடும்பத்தினர் பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA) டிசம்பரில் நடைமுறைக்கு வரலாம்: மே.வங்க பாஜக எம்எல்ஏ கணிப்பு
திக்கோடியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் மாதிரிகளில் இருந்து டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, கடத்தல் வழக்கு தொடர்பாக காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் ஒருவர், இர்ஷாத் புறக்கத்திரி ஆற்றில் குதித்ததாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தார். சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி புறக்கத்திரி ஆற்றுக்கு அருகில் இரண்டு இளைஞர்கள் காணப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளால் எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே இந்த கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இர்ஷாத் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஆற்றில் குதித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞரை கடத்திய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமரச்சேரியை சேர்ந்த நாசர் என்ற நபரே இதற்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர் பினராயியைச் சேர்ந்த முர்ஷித். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர்.. வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்.
வெளிநாட்டில் இருந்து கொடுத்த தங்கத்தை தராமல் ஏமாற்றிய இர்ஷாத் தாக்கப்பட்டு, தடுப்பு மையத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டபோது, ஆற்றில் குதித்து தப்பிச் சென்றதாக, கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். கடந்த மாதம் 15ஆம் திகதி இர்ஷாத் புறக்கத்திரி பாலத்தின் உச்சியில் இருந்து ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதி மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. காரில் வந்த குழுவில் ஒருவர் ஆற்றில் குதித்துவிட்டதாகவும், கார் வேகமாக சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொயிலாண்டிக் கடற்கரையில் ஒரு இளைஞனின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேப்பையூரை சேர்ந்த தீபக் என்ற இளைஞருடையது என முடிவு செய்து அன்றே உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உறவினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்ததால் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இர்ஷாத் கொல்லப்பட்டதும் திக்கோடி கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இர்ஷாத்தின் சடலம் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.