CAA: குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA) டிசம்பரில் நடைமுறைக்கு வரலாம்: மே.வங்க பாஜக எம்எல்ஏ கணிப்பு

By Pothy Raj  |  First Published Aug 5, 2022, 4:43 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ) வரும் டிசம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மே.வங்க பாஜக எம்எல்ஏ ஆசிம் சர்க்கார் தெரிவித்துள்ளார்.


குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ) வரும் டிசம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மே.வங்க பாஜக எம்எல்ஏ ஆசிம் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தின் பாஜக அகதிகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக ஆசிம் சர்க்கார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக்கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பின,போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, அந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிறுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அந்தச்சட்டம் முடங்கியது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான வரையரைகளை உருவாக்கும் பணி நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த சூழலில் வரும் டிசம்பர் மாதம் சிஏஏ சட்டம் நடைமுறைக்குவரலாம் என பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஹரிங்கட்டா தொகுதி பாஜக எம்எல்ஏ ஆசிம் சர்க்கார் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ மாநில அகதிகள்பிரிவின் தலைவராக இருப்பதால் கூறுகிறேன், டிசம்பர் மாதத்துக்குள் குடியுரிமைத்திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிவிக்கிறேன். அந்த நேரத்தில் சட்டத்தின் செயல்முறை தொடங்கும். மக்களின் ஆசைகளை நிறைவேற்ற, குறிப்பாக எல்லை ஓர மாவட்டங்களில் அகதிகளாக வந்திருக்கும் இந்துக்களின் ஆசைகளை நிறைவேற்ற சிஏஏ விரைவில் நடைமுறைப்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்தார்

முன்பு சர்க்கார் அளித்தபேட்டியில் “ 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச்சட்டம் அமல்படுத்தவேண்டும்அவ்வாறு இல்லாவிட்டால் வங்கதேச இந்துக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பாஜக எம்எல்ஏ சர்க்கார் பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலவனத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக் கூறுகையில் “ மே.வங்க மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மம்தா பானர்ஜி அனுமதிக்கமாட்டார். ஆசம் சர்க்கார் போன்ற நபர்கள்தான் மக்களை திசைதிருப்புகிறார்கள்.

அகதிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்,குறிப்பாக மத்துவா சமூகத்தை பொய்யான வாக்குறுது அளித்து தவறாக வழிநடத்துகிறார்கள். கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் எல்லாம் சிஏஏவுக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாட்டில் எந்த இடத்திலுமே நடைமுறைப்படுத்த முடியாது. இதுவரை சிஏஏ தொடர்பாக 300 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. வாக்குவங்கி கருதி இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை ஆசிம் சர்க்கார் போன்றோர் மக்களிடம் தெரிவிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மே.வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரிசந்தித்தார். அப்போது அவரிடம் பேசிய அமித் ஷா, “ கோவிட் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் முடிந்தபின் சிஏஏ நடைமுறைக்குவரும். சிஏஏக்கான வரையரைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

click me!