மழை பெய்கிறது..பள்ளிக்கு இன்று விடுமுறை..இப்படிக்கு அன்புடன் கலெக்டர் மாமா..!ஆட்சியரின் பதிவால் மாணவர்கள் குஷி

By Ajmal Khan  |  First Published Aug 5, 2022, 3:54 PM IST

மழை பெய்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதை தனது முகநூலில் வித்தியாசமாக கூறி மாணவர்களின் அன்பை பெற்றுள்ளார் கேரளாவில் உள்ள மாவட்ட ஆட்சியர்.
 


மழையால் பள்ளிக்கு விடுமுறை

மழைக்காலம் வந்தாலே மாணவர்களுக்கு ஜாலிதான்..அப்பாடா இன்று லீவு விட்டுடுவாங்க என எதிர்பார்த்து இருப்பார்கள், ஒரு சில மாணவர்கள் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணனுக்கு ரசிகர் மன்றமே திறக்கும் அளவிற்கு ரசிகராக இருந்தனர். நாளை மழை பெய்யும் என டிவியில் ரமணன் கூறினால் போதும்  பள்ளிக்கு லீவு உறுதி என  சந்தோஷமாக இருப்பார்கள், அப்படி எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்,  20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் தங்கள் மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படவில்லையென்றால் அவ்வளவு தான் அப்படி கோபப்பட்ட  மாணவர் ஒருவர்  விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் டுவிட்டரில் பள்ளிக்கு இன்று விடுமுறை இல்லையா என  கேள்வியே எழுப்பிவிட்டார்.

Tap to resize

Latest Videos

ஆட்சியரின் அன்பு பதிவு

இதற்க்கு மாவட்ட ஆட்சியரோ ஜாலியாக பதில் சொல்லி அசத்திருப்பார். நாளை உங்கள் அப்பா, அம்மாவை கூட்டிட்டு வந்து என்னை பார் என நகைச்சுவையாக கூறியிருப்பார். அதே போன்று சம்பவம் தான் தற்போது கேரளாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தனது  முகநூல் பக்கத்தில் கனமழை தொடர்பாக வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிப்பு தான் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் V.R.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பதிவில், "அன்புள்ள மாணவ குழந்தைகளே, நாளையும் விடுமுறை  அறிவித்துள்ளேன் என்பதை கூறிக் கொள்கிறேன். மழைக்காலம் என்பதால் பத்திரமாக இருக்க வேண்டும்,

மக்களே உஷார்.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் அறிவிப்பு..

அன்புடன் கலெக்டர் மாமா

மேலும் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது, ​​பைகளில் குடை, ரெயின்கோட் உள்ளதா என்பதை குழந்தைகளாகிய நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை வழி அனுப்பும் போது கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வழி அனுப்புங்கள்..உங்களுக்காக  நாங்கள் இங்கேயே காத்திருப்போம்  கவனமாக சென்று வாருங்கள், சீக்கிரமாக  வீடு திரும்புங்கள் என அன்புடன் வழி அனுப்புங்கள், சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள், நன்றாக வீட்டில் படியுங்கள் .. இப்படிக்கு மிகுந்த அன்புடன் உங்கள் பிரியமான கலெக்டர் மாமா. என அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த முகநூல் பதிவு சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.  இதுவரை 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும்,4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் இந்த பதிவு பள்ளி,கல்லூரி மாணவர்களை மட்டுமில்லாமல் கேரளா மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


இதையும் படியுங்கள்

உஷார் !! நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை.. 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

 

click me!